வெள்ளி, 19 ஜூன், 2015

ஆத்ம காதல்


விழிகளின்
மோதல்களினால்
இதயத்தின்
 துடிப்புகளை
நிறுத்தும் பார்வைகள்.

நொடிப் பொழுதில்
உணர்ந்தேன்
காதலின் நிலையை.

அகத்திற்குள் எழும் மாற்றங்களை
புறத்தோடு புகட்டுவதற்கு
விழிகள் உணர்த்தும்
ஆத்ம காதலை.

வியாழன், 18 ஜூன், 2015


யுத்தம்

கண் முன்னே
இறைவன் தோன்றினான்
அவள் உருவில்.

வள்ளல்களைப் போல்
வரம் அருளினாள்
பார்வைகளில்.

சுவாசத்தின் நேசத்தைக்
கண்டுக்கொள்ள
சூறாவளிக்குள்
இனம் புhpயாதத் தேடல்.


இருவருக்கும்
ஆயுதமில்லா
உலக யுத்தம்
நாள்தோறும,;

ஒவ்வொரு
நிமிடங்களிலும்
விழிகளின் மோதல்களில்
அரங்கேறிக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு நாளும்
ஆயுதம் ஏந்தாமலே
வீழ்த்திச் சென்றாள்
மௌனத்தில்.

உலகம் முழுவதும்
உலா வருகின்றேன்,
பறவையைப் போல
முகவரி தவறியதால்.

நெஞ்சினில்
துரும்பாய் நுழைந்தாள்
முத்துக்களாய் வெளிப்பட்டன
அவளின் நினைவுகள்.

அவளிடம்
உரையாடியதில்லை
ஆனால்;,

அவள் தந்த
நினைவுகளோடு
காகிதங்களில்
உரையாகின்றேன்






 ஏக்கம்..


சூரியனும் சந்திரனும்
ஒரு குவியத்தில்
அவளின் முகம்.

மலா்களின் மனமும்
பொறாமைக் கொள்ளும்
குணம்.

கயல் கூட்டங்களும்
கானம் இசைக்கும்
கண்கள்.

கருநிற மேகங்களும்
வெகுளிக் கொள்ளும்
கூந்தல்.

கொற்கை முத்துகளும்
கொண்டலில் மூழ்கும்
பவள வாய்.

படைத்த பிரம்மனும்
பறைசாற்றும்
நடை.

விட்டில் இனங்களுக்கும்
வரம் அருளும்
தேவதையோ?

ஒருமுறை பிறந்தேன்
பலமுறை இறப்பை
தழுவிச் செல்கிறேன்.

அவளை
காண்கின்ற தருணம்
கண்ணீர் மழையில்
தனியே இழக்கின்றேன்
மெழுகுவா்த்தியாய்.